×

எவ்ளோ நேரம்தான் செல்போன், டிவியை பார்க்குறது தமிழகத்தில் செக்ஸ் பொம்மைக்கு டிமாண்ட்: மகாராஷ்டிரா, கர்நாடகாவிலும் விற்பனை படுஜோர்

கொரோனா பரவாமல் இருக்கணும்னா சமூக இடைவெளி முக்கியமாம். பலான தொழிலில் இடைவெளி எப்படி சாத்தியம்? என்று செக்ஸ் தொழிலாளர்கள் பலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். அவர்களுக்கு மட்டுமல்ல, வீட்டில் சும்மா இருக்கும் பலருக்கும் தனிமை ரொம்பவே வாட்டி வதைக்கிறது. வேலை, வருமானம், எதிர்காலம் பற்றிய கவலை ஒரு புறம் இருந்தாலும், ‘அந்த நினைப்பு’ அவ்வப்போது வந்து வந்து போகிறது. ‘தனிமை’யில் வாடும் பலர், தங்கள் தாபத்தை தீர்க்க ஒரே வழி செக்ஸ் உபகரணங்கள்தான் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் போலும்.

அதனால்தான், ஊரடங்கில் எல்லா துறைகளும் முடங்கி கிடக்கும்போதும், செக்ஸ் பொம்மை, உபகரணங்கள் உற்பத்தி துறையினருக்கு மட்டும் ஓரவஞ்சனையே இல்லாமல் லாபத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் மூலம் செக்ஸ் பொம்மை மற்றும் உபகரணங்களை பலர் ஆர்டர் செய்து வருகின்றனர். சமீபத்திய புள்ளி விவரத்தின்படி, இத்தகைய ஆன்லைன் ஸ்டோர்களை பார்ப்போர் எண்ணிக்கை 2.2 கோடியாக உயர்ந்துள்ளது. 3,35,000 செக்ஸ் உபகரணங்கள் விற்று தீர்ந்துள்ளன.

இது தொடர்பாக, செக்ஸ் பொம்மை, உபகரணங்களை ஆன்லைனில் விற்கும் நிறுவனம் சார்பில் சமீபத்தில் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. இதில், ஊரடங்கிற்கு பிறகு கடந்த சில மாதங்களில் மட்டும் செக்ஸ் பொம்மை, உபகரணங்கள் விற்பனை இந்தியாவில் 65 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது. மாநிலங்களை பொறுத்தவரை இந்த வரிசையில் டாப்  இடத்தில் இருப்பது மகாராஷ்டிரா. அதற்கு அடுத்து கர்நாடகா மற்றும் தமிழகத்தில் செக்ஸ் உபகரணங்கள் விற்பனை சக்கைப்போடு போடுகிறது என்கிறது இந்த சர்வே.

நகரங்களை பொறுத்தவரை மும்பை முதல் இடத்திலும், பெங்களூரு, டெல்லி ஆகியவை 2 மற்றும் 3வது இடங்களில் உள்ளன. சராசரி ஆர்டரில் சூரத் நகரம் முதலிடத்தில் உள்ளது. இங்கு சராசரியாக ஒரு ஆர்டர் மதிப்பு ரூ.3,900 ஆக உள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு துவங்கியபோதே காண்டம் உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் விற்பனை படு ஜோராக நடந்தது. பல இடங்களில் ஸ்டாக் இல்லை. அதன்பிறகு கொரோனா பாதிப்பும் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ‘சமூக இடைவெளியை’ வீட்டிலும் கடைப்பிக்க ஆரம்பித்து விட்டார்களோ என்னவோ? ‘பொம்மை வாழ்க்கை’க்கு பலர் மாறி வருகின்றனர். ஊரடங்கு முடியும் வரை இப்படித்தானோ என்னவோ?

* பெண்களும் சளைக்கவில்லை
பாலின வாரியாக செக்ஸ் உபகரணங்களை ஆர்டர் செய்வோர் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உத்தர பிரதேசத்தில்தான் அதிகமான ஆண்கள் ஆர்டர் செய்துள்ளனர். இருப்பினும் விஜயவாடா, ஜாம்ஷெட்பூர், பெல்காம், வதோதரா ஆகிய நகரங்களில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகமான உபகரணங்களை வாங்கியுள்ளனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

* செக்ஸ் பொம்மை, உபகரணங்கள் அதிகம் தயாரிக்கப்படுவது சீனாவில்தான். இவற்றின் ஏற்றுமதி 50% அதிகரித்துள்ளது.
* இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து ஆர்டர்கள் குவிந்து கொண்டே உள்ளன.
* பெரிய தொழிற்சாலைகள் மாதம் சராசரியாக 2,000 பொம்மைகளும், சிறு தொழிற்சாலைகள் 300 முதல் 500 பொம்மைகளும் உற்பத்தி செய்கின்றன.
* இந்திய மதிப்பில் இவற்றின் விலை ரூ.38,500 வரை உள்ளது.
* உற்பத்தி அதிகரிப்பால் தொழிற்சாலைகளில் 25 சதவீதம் முதல் 4 மடங்கு வரை ஊழியர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
8 சீனாவுக்கு எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும், ‘இந்த விஷயத்தில்’ பாரபட்சமே இல்லாமல் எல்லா நாட்டிலும் அமோக வரவேற்புதான்.

Tags : Karnataka ,Maharashtra ,Tamil Nadu ,Padujor , Any time, cell phone, tv, tamilnadu, sex toy, demand, maharashtra, karnataka, padujor for sale
× RELATED தேசிய அளவிலான வூசு போட்டியில் தமிழக...