×

திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம் பேஸ்புக்கில் நேரலையாக டிரைவர் தற்கொலை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார் (37). டிரைவர். இவர், மனைவி சுகாசினி (34), 13 வயது மகனுடன் மும்மூர்த்தி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சுகாசினி ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் மகனை தாராபுரத்தில் உள்ள தந்தை வீட்டில் விட்டிருந்தார். நேற்று முன்தினம் சுகாசினி வேலைக்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த ராம்குமார், தந்தைக்கு போன் செய்து ‘நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். எனது மகனை பார்த்துக்கொள்ளுங்கள்’ என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

பின்னர், மின்விசிறியில் சேலையால் தூக்குப் போட்டுள்ளார். இதனை தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் நேரலையாக பதிவு செய்துள்ளார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சுகாசினியுடன் அங்கு சென்று பார்த்தபோது, ராம்குமார் இறந்து கிடந்தார். தகவலறிந்து போலீசார் சென்று விசாரித்தனர். வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், ‘கேடுகெட்ட உலகமிது. இங்கு வாழ விருப்பமில்லை. யாரும் பீல் பண்ணாதீங்க’ என எழுதப்பட்டு இருந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : incident ,Facebook Driver ,Tirupur , In Tirupur, shocking incident, Facebook, live, driver, suicide
× RELATED போக்குவரத்து போலீசாரை கண்டித்து...