×

சித்தா, ஆயுர்வேதா மருந்துகள் மூலம் கொரோனாவை தடுப்பதற்கான ஆய்வு: ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

சென்னை: சித்தா, ஆயுர்வேதா யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவத்தின் மூலம் கொரோனாவை தடுக்க முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு கபசுர குடிநீர், நொச்சி குடிநீர், திப்பிலி ரசாயணம் உள்ளிட்ட மருந்து வகைகளின் திறன் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. சித்தா, யுனானி, ஆயுர்வேத மருந்துகளின் மூலம் கொரோனாவை தடுக்க முடியுமா என்பது தொடர்பான தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சித்த மருத்துவத்தின் மூலம் கொரோனா நோயை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், குறித்து ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது “ என்று கூறப்பட்டுள்ளது. அப்போது, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,மத்திய ஆயுஷ் அமைச்சக வழிகட்டுதலின் பேரில் கொரோனா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ முறைகளை பயன்படுத்த முடியுமா என்று ஆய்வு செய்ய இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் தலைமையில் குழு தமிழக அரசு குழு ஒன்றை அமைத்தது.

அக்குழு அளித்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது “ஆரோக்யம்” என்ற பெயரில் ஆயுர்வேதா, சித்தா, யோகா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளை உள்ளடக்கி கொரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல 6 சித்த மருத்துவர்கள் கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக அரசிடம் தெரிவித்ததுள்ளனர். அவற்றை பரிசீலித்தபோது, மருந்து குறித்த நம்பகத்தன்மையையும் செய்முறை குறித்த உரிய விளக்கத்தையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. இந்திய மருத்துவ முறை சார்ந்த மருந்துகளை கொள்முதல் செய்ய ஆண்டு தோறும் தமிழக அரசு 23 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.

கடந்த 2019 ம் ஆண்டு மட்டும் 3 கோடியே 95 லட்சத்து 59 ஆயிரத்து 598 பேர் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறையில் சிகிச்சை பெற்றுள்ளனர். டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களின் போது,3 கோடியே 12 லட்சத்து 70 ஆயிரத்து 93 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் முழுவீச்சில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை அரும்பாக்கம் மற்றும் வியாசர்பாடி ஆகிய இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரத்யேகமாக சித்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொரோனா நோயளிளுக்கு  சித்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பதில் மனுத் தாக்கல் செய்ததை தொடர்ந்து, நீதிபதி கிருபாகரன் வி.எம் வேலுமணி அமர்வு வழக்கு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

Tags : Federal Government ,Siddha , Siddha, Ayurveda, Medicines, Corona, Central Government, Information
× RELATED சித்த மருத்துவ பல்கலை கழகம் அமைக்கும்...