×

வாஷிங்டனில் சக பாதிரியார்களுடன் இணைந்து சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாஜி பிஷப் தியோடர் மெக்கரிக்கிற்கு எதிராக புதிய புகார்..!!

வாஷிங்டன் : வாஷிங்டனில் சக பாதிரியார்களுடன் இணைந்து சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகார்கள் காரணமாக கடந்த 1980ம் ஆண்டில்,  சஸ்பெண்ட் செய்யப்பட்ட, வாஷிங்டன் மாஜி பிஷப் தியோடர் மெக்கரிக்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் மற்றொரு பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நியூஜெர்சியை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டது: நியூஜெர்சியின் மிச்சிகன் பிஷப்பாக தியோடர் மெக்கரிக் இருந்த போது, அவர் மற்றும் மேலும் 5 பாதிரியார்கள் இணைந்து, தனக்கு 11 வயது முதல் 16 வயது இருந்த வரை, பாலியல் தொந்தரவு கொடுத்தனர்.

அதில் நான்கு பேர் கடற்கரை வீட்டில் பாலியல் தொந்தரவு கொடுத்தனர். அதில், கத்தோலிக்க கல்விக்காக ஒரு பாதிரியாரை சந்தித்த போது, அவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், மெக்கரிக்கிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அன்றைய முதல், அவரும் தமக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தியோடர் மெக்கரிக் தவிர்த்து, பாதிரியார்கள் அந்தோணி நார்டினோ, ஆண்ட்ரு தாமஸ் ஹெவிட், ஜெரால்ட் ரூனே, மைக்கேல் வால்டர், ஜான் லாபெராரா ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், கடந்த 2019ம் ஆண்டு 7 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.

மெக்கரிக் மீதான புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 2018 ல் போப் பிரான்சிஸ் உத்தரவிட்டார். பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு தியோடர் மெக்கரிக் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தன் மீது எந்த தவறும் இல்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Theodore McCarthy ,priests ,Washington , Washington, sexual harassment, Bishop Theodore Mechanic, complaint
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...