×

தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும்: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பனிமய மாதா பேராலய விழா ஜூலை 26 முதல் ஆக.5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தூத்துக்குடி தூய பனிமய மாதா போராலய கொடியேற்ற விழா நிகழ்வில் மக்கள் பங்கேற்க்க அனுமதி இல்லை. கொடியேற்ற விழா நிகழ்ச்சியில் பங்குத்தந்தைகள் 15 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவராலும் கொண்டாடப் படும் இந்த பனிமய மாதா ஆலய திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய விழா தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து, மாவட்டத்தில் வருகின்ற 26ம் தேதி முழு முடக்கம் என்பதால் மக்கள் வீட்டில் இருந்து பிரார்த்தனை செய்ய கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.  கொடியேற்ற விழா நிகழ்ச்சியில் பங்குத்தந்தைகள் 15 பேர் மட்டுமே பங்கேற்பார்கள். பேராலய விழா நிகழ்ச்சியில் அனைத்தும் காணொலி மூலமாகவும், சமூக வலைதளங்களில் வாயிலாக ஒளிபரப்பப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Tags : announcement ,Sandeep Nanduri ,Thoothukudi Panimaya Mata Temple Festival , Thoothukudi, Panimaya Mata Temple Festival, Sandeep Nanduri
× RELATED பள்ளிகள் திறப்பு அறிவிப்பு குழப்பமில்லை என்கிறார் அமைச்சர்