×

புதுவையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்ததால் பெரும் பரபரப்பு!!!

புதுச்சேரி:  புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு, சிலர் காவித்துண்டு அணிவித்ததால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் பகுதியில், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், எம்.ஜி.ஆர் சிலை ஒன்று அமைந்துள்ளது.  இன்று மதியம் சுமார் 3 மணியளவில் சில மர்ம நபர்கள் காவித்துண்டை எம்.ஜி.ஆர் சிலையின் கழுத்து பகுதியில் போர்த்திவிட்டு சென்றுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த தகவலானது, சட்டப்பேரவையில் இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகியோருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து, அவர்கள் சட்டப்பேரவையிலிருந்து உடனடியாக புறப்பட்டு வில்லியனூருக்கு சென்றுள்ளனர்.

பின்னர் இந்த தகவலானது அனைவருக்கும் அறிவிக்கப்பட்டு அதிமுக நிர்வாகிகளும்  அங்கு விரைந்தனர்.  எம்.ஜி.ஆர் சிலை மீது காவித்துண்டு அணிந்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அதிமுக எம்.எல்.ஏஏக்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து எம்.ஜி.ஆர் சிலையின் அருகிலேயே அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிலைக்கு அவமதிப்பு ஏற்படுத்தியர்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அதிமுகவினர் எச்சரித்துள்ளனர். இதனால் மறியல் காரணமாக, போக்குவரத்தானது பெரிதளவு பாதிக்கப்படும் என்பதால், வாகன ஓட்டிகளை வேறு வழித்தடங்களில் மாறி செல்ல காவல் துறையினரால் அறிவுறுத்தப்பட்டனர்.

பின்னர், இதனையறிந்த மேற்குப்பகுதி எஸ்.பி ரங்கநாதன் மற்றும் வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சிலை அவமதிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தனர். இதனால், அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது மறியல் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர், எம்.ஜி.ஆர் சிலையில் இருந்த காவித்துண்டு அகற்றப்பட்டு, மாலையை அனுவித்துவிட்டு அதிகமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும், காவல் துறையினர், எம்.ஜி.ஆர் சிலையின் மீது காவித்துணி அணிவித்த மர்ம நபர்கள் யார்? என அருகில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Puthuvai ,MGR , Puduvai, MGR statue, Kavithundu
× RELATED பேட்டை எம்ஜிஆர் நகரில் அடிப்படை வசதி...