×

சென்னையில் கொரோனாவால் இறந்த உயிரிழப்புகள் தமிழக அரசால் மறைக்கப்பட்டுள்ளதாக செயலாளர் ஆர்.எஸ் பாரதி குற்றச்சாட்டு!!!

சென்னை:  சென்னையில் கொரோனாவால் இறந்த உயிரிழப்பு பதிவுகள் தமிழக அரசால் மறைக்கப்பட்டுள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை தமிழக அரசு மறைத்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. அதாவது மார்ச் 1ம் தேதி முதல் ஜூன் மாதம் வரை சுமார் 444 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இவற்றின் உயிரிழப்பு பதிவுகளை தமிழக அரசு மறைத்துள்ளதாக ஆர்.எஸ் பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும்,  கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் கடந்த ஜூன் மாதமே கூறுள்ளதாக இவர் தெரிவித்துள்ளார். எனவே முறையான இறப்புகளை பதிவு செய்யுங்கள், மக்களிடம் ஒளிவுமறைவு காட்டாதீர்கள் என ஆர்.எஸ் பாரதி கேட்டுக்கொண்டார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி அவர்களும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், ஸ்டாலின் அரசியல் செய்ய நினைக்கிறார் என்றெல்லாம் கேலி செய்தார்கள். ஆனால் இன்றைய சூழலில் வெட்டவெளிச்சமாக 444 பேரின் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளனர்.

இதனை மக்கள் அனைவரும் அறியும் காலம் வந்துவிட்டது என செயலாளர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, ஐ.சி.எம்.ஆர் அமைப்பு, கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை எவ்வாறு அடக்கம் செய்ய வேண்டும் மற்றும் கொரோனா பாதித்ததவர்களை எவ்வாறு தனிமைப்படுத்த வேண்டும் என்றெல்லாம் ப்ரோட்டோகாலை கடந்த பிப்ரவரி மாதத்திலே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அதனை பற்றி தலைவர் ஸ்டாலின் கூறுகையில் முதல்வர், அப்போது பல கேலிகிண்டல்களை செய்தார். இதன் விளைவுதான் தற்போது பல பேரின் உயிரை பறித்துள்ளது. அதுமட்டுமல்லாமல்  3 தினங்களில் கொரோனா போய்விடும் என்றெல்லாம் கூறினார்களே, தற்போது முறைகெட்ட வழிமுறைகளாலே பல மக்கள் பலியாகியுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசின் அலட்சியப்போக்கே என ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார். இதனால் இதுவரை இறந்த 444 பேரின் உடல்கள் எவ்வாறு அடக்கம் செய்யப்பட்டது என்பது குறித்து அரசு எவ்வித விளக்கமும் தரவில்லை. இந்தியாவில் தமிழகத்தில் சுமார் 48 தனியார் மற்றும் அரசு மருத்துவனைகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு பல அமைப்புகள் இருந்தும் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், கொரோனா காலத்திலும் ஒவ்வொரு பொருளிலிலும் பல்வேறு கொள்ளைகள் நடைபெற்றுகின்றனர் என்றும் பாரதி குற்றம் சாட்டியுள்ளார். இதனால், கொரோனாவால் இறந்த உயிர்களுக்கு தமிழக அரசு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும், பிற்காலத்தில் இந்த சம்பவம் பெரும் புயலை கிளப்பும் என்று அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு முறைகளுக்கு ஸ்டாலின் அவர்கள் சொல்வதை கேட்டு முறைப்படி நடந்தால் பாதிப்புகளை குறைக்க வாய்ப்பிருப்பதாக ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.

Tags : RS Bharathi ,government ,deaths ,Tamil Nadu ,Chennai , RS Bharathi , Tamil Nadu government ,corona death case
× RELATED மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு...