கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் அனுமதியின்றி மீன் பிடித்ததாக நடிகர்கள் விமல், சூரிக்கு ரூ.2,000 அபராதம் விதிப்பு!!

சென்னை : ஊரடங்கு நேரத்தில் கொடைக்கானலில் தடையை மீறி உலா வந்ததாக நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பேக்குப்பாறையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மகேந்திரன் என்பவரே இந்த புகாரை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடைக்கானல் வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் இறப்பு, போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கு மட்டுமே இ - பாஸ் அனுமதியுடன் கோடைகானல் வரவேண்டும். குறிப்பாக சென்னையில் இருந்து கோடைகானல் வருவதற்கு கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது.

ஆனால் நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்ட 4 பேர் கொடைக்கானலுக்கு வந்தது மட்டுமல்லாமல், பாதுகாக்கப்பட்ட பேரிஜம் ஏரிப்பகுதிக்கு சென்று மீன்பிடித்து கும்மாளம் போட்டுள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு பேரிஜம் ஏரிக்குள் நுழைந்ததாக போதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டதை போன்று.நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தும் அபராதம் விதிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு உடந்தையாக இருந்த வனத்துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இதனிடையே நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்ட வனத்துறை தலா ரூ.2000 அபராதம் விதித்துள்ளது.  

Related Stories:

More