×

இனவெறி பிடித்தவர்களில் முதல் முறையாக அதிபரானவர் டிரம்ப் மட்டும்தான்: ஜனநாயகக்கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் பேட்டி..!!

நியூயார்க்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் 2வது முறையாக அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக்கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலைப் பொருட்படுத்தாமல், இருவரும் தங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் காணொலி மற்றும் நேரடியாகவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வாஷிங்டன் சேவைத்துறை ஊழியர்களுக்கான, சர்வதேச கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் காணொலி மூலம் பங்கேற்று பேசியதாவது: அமெரிக்காவில் இனவெறிபிடித்தவர்கள் பலரும் அதிபராக வேண்டும் என, முயற்சி செய்தனர். ஆனால், அப்படிப்பட்ட யாரும் வெற்றி பெறவில்லை. இனவெறி பிடித்தவர்களில் முதல் முறையாக அதிபரானவர் டிரம்ப் மட்டும்தான். அவர், அமெரிக்காவில் இனவெறியைப் பரப்புகிறார். மக்களை நிறத்தின் அடிப்படையில், அவர்கள் சார்ந்திருக்கும் நாடு, எங்கிருந்து வந்தார்கள் என்பதின் அடிப்படையிலும் பாரபட்சத்துடன் டிரம்ப் பார்க்கிறார்.

இதனையடுத்து, இதுவரை இருந்த எந்த அமெரிக்க அதிபர்களும் இதுபோன்று மக்களை இனவெறியுடன் நடத்தியதில்லை. மக்களைப் பாகுபடுத்திப் பார்த்ததும் இல்லை, குடியரசுக் கட்சியிலிருந்து வந்த அதிபர்கள்கூட, இதற்கு முன் மக்களை இனவெறியுடன் நடத்தியது இல்லை. கொரோனா வைரசைத் தவறாகக் கையாண்டுவிட்டதை மறைக்கவே மக்களிடம் இனவெறியைப் பரப்பி வருகிறார். நான் அதிபரானவுடன், முதல் நூறு நாட்களில் இனவெறியை நீக்க தீர்க்கமான நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Joe Biden ,president ,Democrats ,Donald Trump America , Joe Biden ,Donald Trump ,America,racist president
× RELATED அமெரிக்கா பால விபத்தில் பல உயிர்களை...