×

கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கி தில்லு முல்லு

கூடலூர்: கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சொந்த வாகன உரிமையாளர்கள் சிலர் தங்களது வாகனங்களை வாடகைக்கு ஓட்டுவதாக டாக்ஸி டிரைவர்கள் கடந்த சில வருட காலமாக புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் சில வாகனங்களையும் அவர்கள் பிடித்து வட்டாரப் போக்குவரத்துத் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று கூடலூரில் இருந்து ஊட்டிக்கு வாடகைக்கு இயக்கப்பட்ட தனியாருக்கு சொந்தமான கார் ஒன்றை மடக்கிப் பிடித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து டாக்ஸி ஓட்டுனர்கள் கூறுகையில், ‘‘தாங்கள் இயக்கும் வாடகை வாகனங்களுக்கு வரி, இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றை அரசுக்கு செலுத்தி வருகிறோம்.

வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவுகள் காரணமாக டாக்ஸி ஓட்டுநர்களின் செலவு அதிகரித்து வருகிறது. தற்போது வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு மற்றும் போக்குவரத்து தடை உள்ளதால் கடந்த சில மாதமாக பெரும் சிரமத்திற்கு மத்தியில் கிடைக்கும் வாடகைக்கு வாகனங்களை ஓட்டி செலவுகளை சமாளிக்க முடியாமல் உள்ளோம். சிலர் சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவதால் தங்களது வருமானம் பெரிதும் பாதிக்கின்றது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் வாகனங்களை பிடித்து கொடுத்தும் அவர்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படுவதால் இதே நிலை தொடர்ந்து வருகின்றது. சம்பந்தப்பட்ட துறையினர் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


Tags : Dhillu Mullu ,area ,Kudalur , Cuddalore, own vehicles, rental
× RELATED கூடலூரில் பரபரப்பு மாணவியின் கருவை...