×

2ம் சீசனுக்காக 1 லட்சத்து 70 ஆயிரம் மலர்கள்: சிம்ஸ் பூங்காவில் நடவு பணி துவக்கம்

குன்னூர்: குன்னூர் பகுதியில் தோட்ட கலைத்துறை கட்டுப்பாட்டில் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா உள்ளது. இதில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கு மலர் நடவு பணி துவங்கியுள்ளது‌. தோட்டக்கலை உதவி இயக்குநர் பெபிதா துவங்கி வைத்தார். முதற்கட்டமாக பிரன்ச் மேரிகோல்டு, பால்சம் செடிகள் நடவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு இரண்டாம் சீசனுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகள் பூங்காவில் பல்வேறு பகுதிகளில் நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 75க்கும் மேற்பட்ட மலர் செடி ரகங்கள் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, போன்ற நாடுகளை தாயகமாகக் கொண்ட டேலியா, சால்வியா, பிளாகஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, ஹோலிஹாக், டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், கேலன்டுலா, ஸ்வீட், வில்லியம் உட்பட பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நடவு பணிகளை சமூக இடைவெளியுடன் பூங்கா ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


Tags : season ,Sims Park , Flowers, Sims Park
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு