×

சின்னமனூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் : கண்டுகொள்ளாத அதிகாரிகள்

சின்னமனூர்: சின்னமனூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருவதால் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. சின்னமனூர் அருகே வேம்படிகளம் முல்லைபெரியாற்றில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் தண்ணீரை உழவர் சந்தை அருகில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் நிறைத்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக மாற்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக நகரில் உள்ள 27 வார்டுகளிலும் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இதில் சின்னமனூர் 27வது வார்டு அய்யனார்புரம் சாலை ஒத்தவீடு பகுதியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அடிக்கடி குடிநீர் வீணாக வெளியேறுகிறது. தற்போது மீண்டும் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் மக்களுக்கு முறையாக குடிநீர் சப்ளை ஆகவில்லை. இது குறித்து சின்னமனூர் நகராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Chinnamanur , Chinnamanur, drinking water
× RELATED தேவாரம் பகுதியில் குறைந்து வரும் நாட்டு கோழி வளர்ப்பு