×

எழுமலையில் ஆள் விழுங்கும் கிணற்றால் இருந்த ஆபத்து நீங்கியது: சுற்றுச்சுவர் அமைப்பதால் மக்கள் நிம்மதி

உசிலம்பட்டி: தினகரன் செய்தி எதிரொலியால் எழுமலையில் சுற்றுச்சுவர் இல்லாமல் தரைமட்டமாக பல ஆண்டுகளாக கிடந்த கிணற்றை சுற்றி தற்போது தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், எழுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் காச்சகாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் அதிகமான குடியிருப்பு வீடுகள் உள்ளன. இந்த தெருவில் பல ஆண்டுகளுக்கும் மேலாக தெருவின் அளவிற்கு தரைமட்டமாக கிணறு இருந்தது. இதனால் இந்த வழியாக செல்லும் டூவீலர்கள் மற்றும் கார்கள், பொதுமக்கள் இந்த கிணற்றில் தவறி விழுந்து விடுவோமோ என உயிர் பயத்தில் அப்பகுதியை கடந்து  வந்தனர்.

இது சம்மந்தமாக பலமுறை புகாரும் இந்த தெரு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கொடுத்து வந்தனர். ஆனால் எந்தஒரு நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 20ந் தேதி தினகரன் நாளிதழில் இது சம்மந்தமாக விரிவான செய்தி வெளியாகி இருந்தது. இதன் எதிரொலியாக தற்போது இந்த கிணற்றைச் சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று முடிவுறும் நிலையில் உள்ளது. இதனால் காச்சகாரியம்மன் கோவில் தெரு பொதுமக்கள் உயிர் பயத்திலிருந்து மீள வைத்த தினகரன் நாளிதழுக்கு நன்றி தெரிவித்ததோடு அப்பகுதியில் நிம்மதியாக நடமாடி வருகின்றனர்.

Tags : Ezhumalay
× RELATED கோடை காலத்தையொட்டி மோர் விற்பனை 25% அதிகரிப்பு: ஆவின் நிர்வாகம் தகவல்