×

இந்தியாவில் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம் தான் : அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்!!

ஈரோடு :  இந்தியாவில் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் தான் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது,14 தொலைக்காட்சிகளின் மூலம் ஆகஸ்ட் 1 முதல் வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான்.பள்ளி பாடத்திட்டங்கள் குறித்த 18 போ் கொண்ட குழுவின் அறிக்கையை செயல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். பள்ளி திறப்பு, பாடங்கள் குறைப்பு குறித்து பரிசீலைனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Senkottayan ,state ,Tamil Nadu ,India , India, Television, Lesson, State, Tamil Nadu, Minister Senkottayan, Proud
× RELATED மாநில விலங்கான வரையாடுகள் கணக்கெடுப்பு ஏப்.29ல் தொடக்கம்