×

டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தைக் கடத்தல் சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியீடு!!!

டெல்லி:  டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்திய குழந்தை கடத்தல் சம்பவத்தில் குழந்தையின் சொந்த பெரியப்பாவே கடத்தலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஷாஹர்பூரில் மக்கள் நெருக்கம் மிகுந்த ஒரு தெருவில் நடந்த குழந்தை கடத்தல் நிகழ்ச்சி, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 4 வயதுடைய தனது மகளை கடத்தல்காரர்களிடமிருந்து குழந்தையின் தாய் போராடி மீட்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

இதனைத்தொடர்ந்து கடத்தல்காரர்களை பொதுமக்கள் பிடித்து போலீஸ்காரர்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர்கள் டெல்லியை சேர்ந்த பூபேந்தர் மற்றும் தீரத்ராஜ் என்பது தெரியவந்துள்ளது. இதில் பூபேந்தர் எனப்வர் கடத்தப்பட்ட குழந்தையின் சொந்த பெரியப்பா ஆவார். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த பூபேந்தர், வசதியான நிலையில் இருக்கும் தமது தம்பியிடமிருந்து பெருமளவு பணத்தை அபகரிக்க திட்டம் போட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை கடத்த முயன்றபோது, தனது நண்பருடன் சிக்கிக்கொண்டதாக கடத்தலில் ஈடுபட்ட பூபேந்தர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால் இருவர் மீதும்  3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : child abduction incident ,stir ,Delhi , child abduction ,Delhi ,
× RELATED பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்ற...