×

ராஜஸ்தானில் 35 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் வழக்கு : டிஎஸ்பி உட்பட 11 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் 35 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் வழக்கில் டிஎஸ்பி உட்பட 11 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டீக் தொகுதியில் மதுரா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பரத்ப்பூர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ராஜாமான் சிங், ராஜஸ்தான் மாநிலம் சுயேச்சை எம்எல்ஏ-வாக இருந்தவர். 1985ம் ஆண்டு தேர்தலின் போது தமது ஜீப்பில் சென்று அப்போதைய முதலமைச்சர் சிவசரன் மாத்தூரின் பிரச்சார மேடை மீது மோதினார்.

இதில் ஹெலிகாப்டர் ஒன்றும் சேதம் அடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மறுநாளே ராஜா மான் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இருவர்  டீக் தொகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைய சென்றனர். அப்போது காவல் நிலையத்தில் இருந்த காவல் துணை கண்காணிப்பாளர் கான்சிங் பாடி மற்றும் போலீசார் என்கவுண்டர் நடத்தி ராஜா மான் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இருவரை கொன்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் 11 போலீசார் உள்ளிட்ட 18 பேரின் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதில் 3 பேர் வழக்கு நடந்து கொண்டிருந்த போது காலமாயினர். மற்ற 5 பேர் விடுவிக்கப்பட்டனர். மீதமிருந்த 11 போலீசார் மீதான வழக்கு சுமார் 35 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.தற்போது வழக்கின் குற்றவாளிகளான 11 போலீசாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தற்போது 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. என்கவுண்டர் சம்பவம் அரங்கேறிய 2 நாட்களில் சிவசரன் மாத்தூர் முதல்வர் பதவியில் இருந்து விலகிவிட்டார்.கொல்லப்பட்ட ராஜாமான் சிங் 1977ம் ஆண்டில் இந்திரா காந்தி மற்றும் 1980ம் ஆண்டில் ஜனதா கட்சி ஆலைகளிலும் தனித்து நின்று வெற்றி பெற்றவர்.


Tags : policemen ,Rajasthan , Rajasthan, 35 years, fake, encounter, case, DSP, life sentence, verdict
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...