×

இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர் ஜோஃப்ரா மீது நிறவெறி தாக்கு!: இன்ஸ்டாகிராமில் பலர் கேலி செய்வதாக ஜோஃப்ரா வேதனை!!

லண்டன்: சமூக வலைத்தளங்களில் இனரீதியாக தம்மை சிலர் கேலி செய்வதாக  இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் புகார் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் வெள்ளை நிற வீரர்களால் மட்டுமே நிரம்பி வழியும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் நட்சத்திரமாக மின்னி வரும், கறுப்பின வீரர் தான் ஜோஃப்ரா ஆர்ச்சர். இவர் வலது கை வேகப் பந்து வீச்சாளர் ஆவார். இவர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் தற்போது புகார் ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் சில விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் தன்னை இன்ஸ்டாகிராமில் இன, நிறரீதியில் இழிவுபடுத்தி பதிவிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து, தன்னை மனதளவில் காயப்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 25 வயதான ஜோஃப்ரா, மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கறுப்பின தாய்க்கும், இங்கிலாந்தை சேர்ந்த கறுப்பின தந்தைக்கும் பிறந்தவராவார். தனது அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பு அளித்து வரும் ஜோஃப்ராவை, இனரீதியாக பலர் கேலி செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று அண்மையில் மேற்கிந்திய தீவுகளின் வீரர் டாரல் ஐ.பி.எல். போட்டிகளின் போது நிற துவேசத்தை சந்தித்ததாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Joffra ,attack ,many ,Joffre ,England , Racist attack , England bowler, Joffra ,Instagram,
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...