துபே என்கவுன்டர் விசாரணை குழு முன்னாள் நீதிபதி சவுகான் ஒப்புதல்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் தன்னை பிடிக்க வந்த டிஎஸ்பி உட்பட 8 போலீசாரை சுட்டுக் கொன்ற பிரபல தாதா விகாஸ் துபேவை, கடந்த 10ம் தேதி போலீசார் சுட்டுக் கொன்றனர். போலீசார் திட்டமிட்டே இந்த என்கவுன்டரை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், இது நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த விசாரணை குழுவுக்கு தலைமை தாங்க, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.எஸ். சவுகான், சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Related Stories: