×

புதுச்சேரி சட்டசபையில் கிரண்பேடி நாளை உரை

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 20ம் தேதி கவர்னர் உரையும் அதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சட்டசபை செயலகம் அறிவித்தது. 20ம் தேதியன்று சட்டசபைக்கு கவர்னர் வராமலே பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் கோப்புக்கு ஒப்புதல் தரப்படுமா? என்று கிரண்பேடியிடம் கேட்டதற்கு, பட்ஜெட்டுக்கு ஒப்புதலை தந்துள்ளேன் சட்டப்பேரவையில் ஆளுநரான என்னை உரையாற்ற அழைத்தனர். அதன்படி வரும் 24ம் தேதி (நாளை) சட்டப்பேரவையில் உரையாற்றுகிறேன் என தெரிவித்தார். இதையடுத்து 3 நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.


Tags : Kiranpedi ,Puducherry Assembly , Puducherry Assembly, Kiranpedi, Tomorrow, Speech
× RELATED புதுச்சேரி சட்டமன்ற வாயிலில்...