×

ராஜபாளையம் திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் எம்எல்ஏவாக திமுகவைச் சேர்ந்த தங்கபாண்டியன் (48) உள்ளார். இவரது மகளுக்கு கடந்த மாதம் தளவாய்புரத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த பின் மதுரையில் உள்ள மருமகன் வீட்டில் நடந்த விசேஷங்களுக்கு எம்எல்ஏ குடும்பத்தினர் சென்று வந்தனர். இந்த நிலையில் தங்கபாண்டியனின் 46 வயதான மனைவி, 23 வயதான இரட்டை மகன்களுக்கு கடந்த ஜூன் 28ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஜூலை 14ம் தேதி எம்எல்ஏ தங்கபாண்டியனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது வந்த பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Rajapalayam DMK MLA ,Corona ,Rajapalayam DMK , Rajapalayam, DMK MLA, Corona
× RELATED கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி?