×

திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் விதிகளை மீறி கடைகள் திறந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்: செயல் அலுவலர் எச்சரிக்கை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் பகுதியில் பிற்பகல் 2 மணிக்கு மேல் கடைகள் திறந்திருந்தால் ரூ.5 ஆயிரம் அபராதமும், போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரித்தார்.
திருக்கழுகுன்றம் சிறப்பு நிலை பேரூராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. கொரோனாவை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பேரூராட்சியில் உள்ள அனைத்து வியாபாரி சங்கங்கள், வருவாய்த்துறை, காவல்துறை, அரசு மற்றும்  வங்கி மேலாளர்கள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.

பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார் (பொறுப்பு) தலைமை தாங்கினார். துணை தாசில்தார் கார்த்திக் ரகுநாத், எஸ்ஐ வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் அனைத்து வணிக நிறுவனங்கள், சிறிய கடைகள் உணவகங்கள், வங்கிகள் நேற்றுமுதல் வரும் 31ம் தேதிவரை காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகிறது. மதியம் 2 மணிக்கு மேல் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைக்க வேண்டும். இந்த நடைமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று மதியம் 2 மணிக்கு மேல் ஒரு சில கடைகள் மூடவில்லை என பேரூராட்சி அலுவலகத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து, செயல் அலுவலர் சதீஷ்குமார், ஊழியர்களுடன் சென்று அறிவிப்பை மீறி திறந்திருந்த கடை உரிமையாளர்களை எச்சரித்து கடைகளை மூட செய்தார். பின்னர், பேரூராட்சி பகுதியில் கொரோனாவை தடுக்கவே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை கடைபிடிக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பேரூராட்சி மூலம் ரூ.5 ஆயிரம் அபராதமும், காவல் துறை மூலம் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.

Tags : shops ,municipality ,Thirukkalukkunram ,Executive Officer , Screwing municipality, irregular; Shops; Rs. 5 thousand; Penalty; Executive Officer; Warning
× RELATED திருக்கழுக்குன்றம் 10வது வார்டில் ரூ.38...