×

கொரோனா தொற்று பரிசோதனை முகாம்

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சியில் மல்ரோசாபுரத்தில், நேற்று தமிழக அரசு சார்பில் இலவச கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. ஊராட்சி செயலர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விஏஓ சங்கீதா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஒத்திவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆனந்தன் கலந்து கொண்டு நடமாடும் மருத்துவ குழுவினர் மூலம் கொரோனா பரிசோதனை நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

மதுராந்தகம்: சித்தாமூர் ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், இலவச கொரோனா பரிசோதனை முகாம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துபாக்கம் ஊராட்சியில் நேற்று நடந்தது. பொலம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர், பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்து, சத்து மாத்திரைகள் வழங்கினர். முகாமில் உதவி திட்ட அலுவலர் அம்பிகாபதி, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி, நிர்மலன், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், ஊராட்சி செயலர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Corona Infection Testing Camp ,Camp ,Corona Infection Testing , Corona infection, examination, camp
× RELATED சோதனைச்சாவடியில் ஒற்றை யானை முகாம்