×

காக்ராபரில் 3வது அணு உலையில் மின் உற்பத்தி துவக்கம்: மோடி, அமித்ஷா வாழ்த்து

புதுடெல்லி: காக்ராபர் அணுமின் நிலையத்தில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட 3வது அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள காக்ராபர் அணுமின் நிலையத்தின் 3வது அணு உலை, 700 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலையில் நேற்று முதல் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘காக்ராபர் அணு மின் நிலையத்தின் மூன்றாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டதற்கு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக திகழும்,’ என தெரிவித்துள்ளார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பதிவில், ‘குஜராத்தில் காக்ராபர் மூன்றாவது அணுமின் நிலையம் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டது. இந்திய அணுசக்தி வரலாற்றில் இது மிகப்பெரிய நாளாகும். இந்த மிகப்பெரிய சாதனைக்காக விஞ்ஞானிகளுக்கு இந்த நாடு மரியாதை செலுத்துகிறது. பிரதமர் நரேந்திரமோடியின் ஆத்மநிர்பார் பாரத் நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது,’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Commencement ,reactor ,Modi ,Amitsha ,Khobar , At Khograbar, 3rd Nuclear Reactor, Power Generation, Launch, Modi, Amit Shah, Greetings
× RELATED பிரதமர் மோடி வருகையைக் கண்டித்து...