×

மருந்து, வங்கி பங்குகளில் ஆர்வம் கடந்த காலாண்டில் இணைந்த 21 லட்சம் முதலீட்டாளர்கள்

புதுடெல்லி: ஜூன் மாதத்துடன் முடிவடைந்த கடந்த காலாண்டில், 45 நிறுவனங்கள் புதிதாக மொத்தம் 21 லட்சம் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளன. இதில், வங்கிகள், மருந்து நிறுவனங்கள், அதிகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்களில் முதலீடு அதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் 4.16 லட்சம் முதலீட்டாளர்கள் இணைந்துள்ளனர். இந்துஸ்தான் யூனிலீவர் 2.19 லட்சம் பேரையும், ஐசிஐசிஐ வங்கி 1.85 லட்சம் பேரையும், டைட்டன் 1.49 லட்சம் பேரையும், இந்தியன் ஆயில் 1.49 லட்சம் பேரையும் ஈர்த்துள்ளது. 45 நிறுவனங்களிலும் சேர்த்து மொத்தம் 21,12,038 முதலீட்டாளர்கள் கடந்த காலாண்டில் இணைந்துள்ளனர். கொரோனா பரவல் சில்லறை முதலீட்டாளர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை இது பிரதிபலிக்கிறது என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags : investors , Pharmaceuticals, banking stock, interest, last quarter, 21 lakh, investors
× RELATED சென்னை ஐஐடியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு