×

சுயசார்பு இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு தேவை: இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு...!!!

டெல்லி: அமெரிக்க -இந்தியா தொழில் கவுன்சில் கூட்டத்தில் டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, உலகிற்கு சிறப்பான எதிர்காலம்  தேவைப்படுகிறது என்றார். இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அமெரிக்காவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பேரிடர் காலத்தில் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளது. திறந்த மனது,  வெளிப்படையான சந்தையை ஏற்படுத்தி தரும். தொழில் செய்ய வேண்டியதை எளிதாக்க வேண்டியது அவசியம். உலக பொருளாதார நிலையை எதிர்கொள்ள உள்ளூர் பொருளாதாரம் வலுவடைய வேண்டும். அரசு நிர்வாகத்தில் இந்தியா  வெளிப்படை தன்மையை கடைபிடித்து வருகிறது என்றார்.

உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கின்றன. சுயசார்பு இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு தேவை. இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. இந்தியாவின் சுகாதாரத்துறையில்  உலக நாடுகள் முதலீடு செய்ய இதுவே தக்க தருணம். மருத்துவ தொழில்நுட்பம், டெலி மெடிசன் ஆகியவற்றில் பங்களிப்பு தேவை. அந்திய நேரடி முதலீடுகளை ஈடுப்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்திய மருத்துவ துறை  ஒவ்வொரு ஆண்டும் 22% வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார்.

 வாய்ப்புகளுக்கான நாடாக இந்தியா உருவாகி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நேரடி அன்னிய முதலீட்டில் இந்தியா சாதனை படைத்து வருகிறது. வாய்ப்புகள் அதிகம் நிறைந்த நாடாக இந்தியா மிளிர்ந்து வருகிறது. இந்தியாவில்  நகர்ப்புறங்களை விட, கிராமப்புறங்களில் இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சுயசார்பு திட்டத்தின் மூலம் இந்தியா உலகிற்கு பெரிய வழிகாட்டுதலை ஏற்படுத்தி தந்துள்ளது. டிஜிட்டல் மயமாக்குதல், ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்தல் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறோம். சிறப்பான எதிர்காலத்தை  உருவாக்க ஒருங்கிணைந்த முயற்சி அவசியம். லட்சக்கணக்கான மக்களுக்கு வீடுகள் கட்டித்தரலாம், சாலைகள் அமைக்கலாம். சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க ஒருங்கிணைந்த முயற்சி அவசியம். இந்தியா விமான நிறுவனங்களில் 1,000  புதிய விமானங்களை சேர்க்க தி்ட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னேற்றத்திற்கான இலக்கு, ஏழை மக்களை மையப்படுத்தியே உள்ளது. அடுத்த 8 ஆண்டுகளில் விமானத்தை பயன்டுத்துவோர் எண்ணிக்கை இரட்டிப்பாகும். மின்சக்தி, விமானத்துறை, காப்பீட்டுத்துறையில் முதலீடு செய்யலாம்  என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இயற்கை எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக இந்தியா இருப்பதால் நிறுவனங்கள் முதலீட்டுக்கு வாய்ப்பாக உள்ளது.


Tags : Modi ,India ,US ,world , Autonomous India needs US cooperation: Prime Minister Modi calls on the world to invest in India ... !!!
× RELATED ஏஐ தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா...