×

சத்தீஸ்கரில் கொரோனா தொற்றுக்கு துணை ராணுவ படை உள்ளிட்ட 443 பாதுகாப்பு படைவீரர்கள் பாதிப்பு

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் கொரோனா தொற்றுக்கு துணை ராணுவ படை உள்ளிட்ட 443 பாதுகாப்பு படைவீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சத்தீஸ்கரில் பாதிப்புகளை குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சத்தீஸ்கரில் 114 போலீசார் மற்றும் 329 துணை ராணுவ படை வீரர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராய்ப்பூரின் பழைய போலீஸ் தலைமையகத்தில் 26 போலீசாருக்கும், புதிய தலைமையகத்தில் 7 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராய்ப்பூரில் மாநில சட்டம் ஒழுங்கு பணியாளர்களிடையே அதிக கொரோனா தொற்று பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதுவரை சத்தீஸ்கரின் மாநில போலீசார் 38 பேர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 34 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக ராய்ப்பூரின் போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். பஸ்தார் பிராந்தியத்தில் போலீஸ் படை மற்றும் துணை ராணுவ படையின் ஜவான்கள் உள்ளிட்ட 193 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவற்றில் டான்டேவாடா மாவட்டத்தில் அதிகபட்சமாக 41 பேர் பாதிக்கப்பட்டனர். சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் துணை ராணுவ படையை சேர்ந்த 60,000 ஜவான்கள் உள்ளனர்.



Tags : Chhattisgarh ,security personnel ,Security Forces ,Corona , Security Forces, Corona
× RELATED திருப்பதி மாவட்டத்தில் மத்திய...