×

நாங்குநேரியில் நள்ளிரவு வாகன சோதனை; அதிகபாரம் ஏற்றிச்சென்ற 12 லாரிகள் பறிமுதல்

நாங்குநேரி: நாங்குநேரி அருகே விதிமுறைமீறி அதிகபாரம் ஏற்றிச்சென்ற 12 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் பகுதியில் இருந்து குமரி மாவட்ட ரயில்வே ஒப்பந்த பணிகளுக்கு தினமும் வாகனங்களில் கட்டுமான பொருட்கள் ஏற்றி செல்லப்படுகின்றன.  லாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றி செல்வதால் நாங்குநேரி - மூலைக்கரைப்பட்டி சாலை சேதமாகி வருவதுடன் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் படுகாயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில் நாங்குநேரி டிஎஸ்பி  ஸ்ரீலிசா ஸ்டெபிலா தெரஸ் தலைமையிலான போலீசார் நேற்றிரவு நாங்குநேரி ரயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குமரி மாவட்ட ரயில்வே ஒப்பந்த பணிகளுக்காக விதிகளைமீறி அதிகபாரம் ஏற்றிச்சென்ற 12 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Nanguneri , Nanguneri, vehicle inspection, seizure
× RELATED “ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன்...