தகுதிநீக்கம் செய்ய தடையை எதிர்த்து ராஜஸ்தான் சபாநாயகர் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சபாநாயகர் சி.பி.ஜோஷி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறுகிறது. சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய தடை விதித்ததை எதிர்த்து மனு அளித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிரான அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது பேரவை தலைவர் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை விதித்துள்ளது. சச்சின் பைலட், ஆதரவு எம்.எல்.ஏ.க்களை ஏன் தகுதிநீக்கம் செய்யக்கூடாது என்று சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.  நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ராஜஸ்தான் ஐகோர்ட் விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால், துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அவர் உட்பட 19 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில் சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து சபாநாயகர் சி.பி.ஜோஷி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.

Related Stories:

>