72 மணி நேரத்தில் ஹுஸ்டன் சீன துணைதூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவு: சீனா தகவல்..!!

பெய்ஜிங் : ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக பீஜிங்கில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தின் முன்பு வைத்து முக்கியமான டாக்குமென்ட்கள் எரிக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் விளக்கம் அளித்து வருவதாக அமெரிக்கா மீடியாக்களில் செய்தி வெளியானது.

ஹாங்காங்கில் சீனாவின் பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்தியது, ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் மற்றும் தென் சீன கடலில் ஆதிக்கம் செலுத்த நினைப்பது ஆகியவற்றால், சீனா மீது அமெரிக்கா கடும் ஆத்திரத்தில் உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் அறிவார்ந்த சொத்துரிமை மற்றும் தனிநபர் ரகசிய பாதுகாப்புக்காக ஹுஸ்டனில் உள்ள சீன துணை தூதரகத்தை மூட வேண்டம் என கூறி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, ஹுஸ்டன் சீன துணைதூதரக வளாகத்தில் சீன அதிகாரிகள் ஆவணங்களை தீயிட்டு எரித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தை 72 மணி நேரத்திற்குள் மூடுவதற்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக பீஜிங்கில் இருந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்று தெரிவித்துள்ளது.

Related Stories:

>