×

H-1B உள்ளிட்ட வேலை விசாக்களை ரத்து செய்த அதிபர் டிரம்பின் கட்டுப்பாடுகளை ரத்து செய்யக் கோரி அமெரிக்க வர்த்தக அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு..!!

வாஷிங்டன்: H-1B உள்ளிட்ட வேலை விசாக்களை ரத்து செய்த அதிபர் டிரம்பின் அரசியல் கட்டுப்பாடுகளை ரத்து செய்யக் கோரி பல பெரிய அமெரிக்க வர்த்தக அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் எச்-1பி விசாவை இந்தஆண்டு இறுதி வரை ரத்து செய்வதாக அறிவித்துள்ள டிரம்ப் அரசுக்கு எதிராக,  174 இந்தியர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கொரோனாவால் அமெரிக்கர்களுக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளதை சமாளிக்க, இந்த ஆண்டு இறுதி வரை வெளிநாட்டு பணியாளர்களுக்கு H-1B, H-4 1மற்றும் L, J 1விசாக்களை வழங்க வேண்டாம் என டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  இதனை எதிர்த்து சான் பிரான்சிஸ்கோ பெடரல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் அதிபர் டிரம்ப் தமது அதிகார எல்லைகளை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க வர்த்தக சபை, தேசிய உற்பத்தியாளர் கூட்டமைப்பு, தேசிய சில்லறை வர்த்தக கூட்டமைப்பு ஆகியன இணைந்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளன.

அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பொறியாளர்கள், ஐ.டி.ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்டோருக்கு விசா மறுப்பது அரசின் சட்டவிரோதமான குடியேற்ற கட்டுப்பாடுகளாகும் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Trump ,revocation ,U.S. Trade Organization ,US , U.S. business community,President Trump ,H-1B
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்