×

உத்தரப்பிரதேசத்தில் ராம ராஜ்ஜியத்துக்குப் பதிலாக குண்டர் ராஜ்ஜியம்: பத்திரிகையாளர் கொலை குறித்து ராகுல்காந்தி ட்வீட்

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது மருமகளை சிலர் துன்புறுத்தியதை எதிர்த்ததற்காக பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். வாக்குறுதியில் ராம ராஜ்ஜியத்துக்குப் பதிலாக குண்டர் ராஜ்ஜியத்தை உத்தரப்பிரதேச அரசு வழங்கியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

காஜியாபாத்தில் நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த விக்ரம் ஜோசியின் உறவுக்கார பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த சிலர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விக்ரம் ஜோசி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு விக்ரம் ஜோசியை அவரது இரு மகள்கள் கண்முன்னே அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இதுதொடர்பாக 9 பேரை கைதுசெய்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த விக்ரம் ஜோசி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.



Tags : Rahul Rajya ,Rama Rajya ,Rahul Gandhi ,Uttar Pradesh ,journalist ,murder ,Vikram Joshi , Rahul Gandhi, journalist, murder, Vikram Joshi
× RELATED சொல்லிட்டாங்க…