×

கல்லணை கால்வாயில் குளிக்கச்சென்ற கல்லூரி மாணவன் உயிரிழப்பு.: நண்பர்களுடன் குளிக்க சென்றபோது நேர்ந்த கொடுமை

தஞ்சை: தஞ்சையில் கல்லணை கால்வாயில் குளிக்க சென்று ஆற்றில் அடித்து சென்ற மாணவனின் உடல் இன்று ஓடையில் கரை ஒதுங்கியது. சீனிவாச புறம் கீழக்கரையை சேர்ந்த பிரவீன்குமார் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் இணைந்து ரெட்டிப்பாளையம் அருகே கல்லணை கால்வாய் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு குளிக்க சென்று சிக்கிக்கொண்ட 3 மாணவர்களை கிராமமக்கள் பாத்திரமாக மீட்டனர்.

பிரவீன்குமாரை மீட்க மூடியதால் கிராம மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் தீயணைப்பு துறை விடிய விடிய அவரை தேடி வந்துள்ளனர். இந்தநிலையில் இன்று காலை வாண்டையார் இருப்பு கல்யாண ஓடையில் பிரவீன்குமாரின் உடல் கரை ஒதுங்கியது. மாணவனின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  Tags : canal ,College student ,Kallanai ,friends , College, student,e bathing ,Kallanai, Cruelty ,friends
× RELATED சேரன் விரைவு ரயிலில் கல்லூரி...