×

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?: பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பின்னர் பள்ளிகள் திறக்கப்படுமென அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!!

ஈரோடு:  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துகளை அறிந்த பின்னரே, முடிவு செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக  தமிழகம் முழுவதும் கடந்த 3 மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே விளாங்கோவில், சிறுவலூர், அயலூர் உள்ளிட்ட 7 கிராம ஊராட்சிகளில் சாலை பணிகள் மற்றும் தடுப்பணைகள் அமைத்தல் பணிகளுக்கு பூபி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்புகள் வரை உள்ள மாணவர்களின் பெற்றோர்களின் விருப்பம் அறிந்த பின்னரே,  பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், கொரோனா பாதிப்பின் சூழல் அறிந்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வரும் ஆண்டில் தேர்வு எழுத உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : schools ,Senkottayan ,Tamil Nadu ,parents , schools open Tamil Nadu , Senkottayan ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...