கோவில்பட்டி : தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே கயத்தாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்து திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார். வெளிநாடுகளைப் போன்று இடைவெளி விட்டு படம் பார்த்தால், உரிமையாளருக்கு லாபம் கிடைக்காது, என்றார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது..
