×

சோமாலியாவில் இருந்து இந்திய-பாகிஸ்தான் எல்லை நோக்கி நகரும் வெட்டுக்கிளிகள்.: ஐ.நா அமைப்பு எச்சரிக்கை

நியூயார்க்: இந்திய-பாகிஸ்தான் எல்லை நோக்கி வெட்டுக்கிளி கூட்டம் படையெடுக்க வர வாய்ப்பு உள்ளதாக ஐ.நா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2019-ம் ஆண்டு இறுதியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் சோமாலியா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் 70 ஆயிரம் ஹெக்டர் பண்ணை நிலப் பயிர்கள் சேதம் அடைந்தது. மேலும் கென்யாவில் 2,400 கி.மீ. பரப்பிலான மேய்ச்சல் நிலம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில் மாலியாவின் ஹர்கீசியா மற்றும் கரோவே பீடபூமியில் தற்போது வெட்டுக்கிளி கூட்டம் காணப்படுகிறது. அந்த வெட்டுக்கிளி கூட்டத்தை விரட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஐ.நா உணவு விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் சோமாலியாவில் இருந்து இந்திய பெருங்கடல் வழியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையின் இருபுறங்களிலும் இனப் பெருக்கத்திற்காக வெட்டுக்கிளிகள் விரைவில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா-வின் இந்த எச்சரிக்கையை அடுத்து தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பின் அதிகாரி குர்ஜார் கூறியுள்ளார். பாலைவனங்களில் வெட்டுக்கிளிகள் தற்போது இனப்பெருக்கம் செய்து வருவதால் அவற்றின் எண்ணிக்கையும் பல மடங்காக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : UN ,Somalia ,border ,Indo-Pakistani ,Pakistani , Locusts, Somalia, Indo-Pakistani, border,UN
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐநா பொதுச்செயலாளர் கருத்து