×

சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டண முறைக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு!

சென்னை: சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டண முறைக்கு எதிரான பொதுநல வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. OTP இல்லாமல் ஃபாஸ்டேக் முறையில் பணம் வசூலிக்கப்படுவதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் முறை மூலம் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது ஒரு சுங்கச்சாவடியில் 4 கவுண்டர்கள் இருப்பின் அதில் 3 கவுண்டர்களின் ஃபாஸ்டேக் முறை மூலமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அனைத்து நடைமுறைகளும் ஃபாஸ்டேக் முறைக்கு மாற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்து, அதனை கடந்த ஜனவரி மாதம் முதல் செயல்படுத்தி வந்தது. இந்நிலையில் இத்திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும். ஃபாஸ்டேக் முறை மூலம் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள். அவரவர் வங்கி கணக்கில் இருந்து OTP இல்லாமல் நேரடியாக பணம் எடுப்பது ஆபத்தாக இருக்கும்.

ஆதனால் தற்போதுள்ள நடைமுறையான, பணம் செலுத்திவிட்டு சுங்கச்சாவடியை கடக்கும் முறையே தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அப்போது மத்திய அரசின் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் ஃபாஸ்டேக் நடைமுறை என்பது நீண்ட ஆலோசனைக்கு பின்னரே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஒரு இடத்தில் தேங்குவதை குறைக்கும் நோக்கத்தில் தான் இந்த முறை செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த திட்டத்தின் முழுமையான பலனை அறிந்த பிறகே மக்கள் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். இந்த முறையை தேர்ந்தெடுக்காதவர்களுக்கு என தனி வழி உருவாக்கப்பட்டு அதன் மூலமாக வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வாகனங்களில் ஃபாஸ்டேக் முறைக்கு எதிரான பொதுநல வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : ICourt ,HighCourt , HighCourt,fastag payment system ,tollgates
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...