×

வேலூர் சிறையில் தற்கொலைக்கு முயன்ற நளினி நலமுடன் உள்ளார் : சிறை மருத்துவர் சான்று!!

வேலூர்: வேலூர் சிறையில் தற்கொலைக்கு முயன்ற நளினி நலமுடன் உள்ளதாக சிறை மருத்துவர் சான்று அளித்துள்ளார். நளினிக்கும் அவரது அறைக்கு அருகில் உள்ள மற்றொரு பெண் கைதிக்கும் கடந்த 3 நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மீண்டும் நளினிக்கும், அந்த கைதிக்கும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள முயன்றதாக தெரிகிறது.  இதையடுத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிய நளினி, அறையில் இருந்த துணியை எடுத்து தனது கழுத்தில் 2 சுற்றுகள் சுற்றி இறுக்கிக் கொண்டாராம்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Nalini ,jail ,Vellore , Vellore, Jail, Suicide, Nalini, Neurologist, Certificate
× RELATED வேலூர் சிறையில் இருந்து புழல்...