×

ஒடிசாவில் ஏவுகணை சோதனை வெற்றி.! எதிரி நாடுகளின் பீரங்கிகளை தாக்கி, அழிக்கும் திறன் கொண்டது துருவாஸ்ட்ரா ஏவுகணை

பாலசோர்: ஒடிசாவில் ராணுவ ஆராய்ச்சி மையம் ஏவுகணை சோதனை நடத்தியது. ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோரில் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. கடந்த 16,17-ம் தேதிகளில் இந்த ஏவுகனை சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டரில் இருந்து சென்று தாக்ககூடிய ஹெலினா ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற ஏவுகணைக்கு தற்போது துருவாஸ்ட்ரா என்று பெயரிடப்பட்டுள்ளது.

துருவாஸ்ட்ரா ஏவுகணை எதிரி நாட்டு பீரங்கிகளை தாக்கி, அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் சுமந்து சென்று சோதனை நடத்தபடவில்லை. தரையில் இருந்து சோதனை நடத்தப்பட்டடு. இந்த ஏவுகணை நேரடி மற்றும் மேல் தளங்களில் இருந்து தாக்கும் தன்மைகொண்டதாகும். அதி வேகமாக சென்று தாக்கக்கூடியதாக உறுவாக்கப்பட்டுள்ளது. துருவாஸ்ட்ரா ஏவுகணை ஹெலிகாப்டர் இல்லாமல் செயல்படும் திறன் கொண்டது.


Tags : Odisha ,enemy nations , Odisha missile test, artillery, Truvastra missile
× RELATED ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில்...