ராஜபாளையம் எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி!!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் எம்.எல்.ஏ., எஸ். தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, அவரது மனைவி மற்றும் 2 மகன்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில்,  திமுக எம்.எல்.ஏ தங்கபாண்டியனுக்கும் தற்போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இதனால், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், காவலர்கள், துப்புரவு தொழிலாளர்கள், செலிவியர்கள் என அனைவருக்கும் சமீபகாலமாக கொரோனா பாதிப்பானது உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தும் உள்ளனர். இதனால், மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.  இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் அந்தந்த மாவட்டங்களில் கொரோனா நிவாரண மற்றும் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கும் சமீபத்தில், கொரோனா பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர்களின் எண்ணிக்கை 17ஆக உள்ளது. இந்நிலையில், தற்போது, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் எம்.எல்.ஏ., எஸ். தங்கபாண்டியனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் விருதுநகர் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>