×

காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலி.: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

மேட்டூர்: தென்மேற்கு பருவ மழையால் கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.  தென்மேற்கு பருவ மழை காரணமாக  கர்நாடக மாநிலத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள கபினி மற்றும் கிருட்டிணராச சாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்துக்கு கர்நாடக வழங்க வேண்டிய காவிரி நீரை இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 5000 கனஅடி விதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. காவிரியில் இருந்து வினாடிக்கு 4,352  கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.

மேலும் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.07 அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் இருப்பு 31.06 டிஎம்சி-யாக உள்ளது.


Tags : dam ,catchment area ,Mettur ,Cauvery , heavy ,rains , catchment, Cauvery , Mettur, dam
× RELATED மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!