×

டெல்லி அருகே மர்ம நபர்களால் தாக்கப்பட்ட பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

டெல்லி: டெல்லி அருகே நேற்றிரவு 10.30 மர்ம நபர்களால் தாக்கப்பட்ட பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 20 ம் தேதி இரு மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற ஜோஷியை மர்ம நபர்கள் காசியபாத் அருகே மடக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த விக்ரம் ஜோஷி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி உத்தர பிரசேதம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விக்ரம் ஜோஷி தனது மருமகளை ஒரு கும்பல் துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகார் அளித்த நான்கு நாட்களுக்குப்பிறகு விக்ரம் ஜோஷி தாக்கப்பட்டுள்ளார். பத்திரிக்கையாளர் சுடப்பட்ட இடத்தில் இருந்து சிசிடிவி கேமராவில் இந்த தாக்குதல் பதிவாகியுள்ளது.

Tags : Vikram Joshi ,persons ,Delhi , New Delhi, Vikram Joshi, journalist, dies
× RELATED மதுரை கரிமேட்டில் கஞ்சா வைத்திருந்த பிரபல ரவுடி உள்பட 4 பேர் கைது