×

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணை அடுத்த வாரம் வெளியீடு

மும்பை: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை அடுத்த வாரம் வெளியாகிறது. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தலைத்தூக்க தொடங்கியதாலும், ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாலும் 20 ஓவர் உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டுவிட்டதால், அந்த காலகட்டத்தில் ஐக்கிய அரபு நாடுகளில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.

அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.பி.எல். ஆட்சி மன்றக்குழு  அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் காணொளி மூலம் ஆலோசித்து போட்டி அட்டவணையை இறுதி செய்கிறது. வரும் செப்டம்பர் 26ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரை, ஐ.பி.எல். தொடர் நடத்தப்படும் என்று தெரிகிறது. முழுமையாக 60 ஆட்டங்களையும் நடத்த வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் முனைப்பு காட்டுகிறது. போட்டிகளை நேரில் பார்க்க ரசிகர்களை அனுமதிப்பது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளிலும் ஐ.பி.எல். போட்டிகள் முறையே தென்ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : IPL ,UAE ,match , IPL,UAE, match, released ,next week
× RELATED சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி...