×

அதிகாரிகள் ஆய்வு நிறைவு எரிவாயு குழாய்கள் மாற்றுப்பாதையில் பதிக்கப்படுமா?: கிராம மக்கள் எதிர்பார்ப்பு

ஸ்பிக்நகர்: தூத்துக்குடி அருகே மாற்றுப்பாதையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் தொடர்பாக அதிகாரிகள் நடத்திய ஆய்வு நிறைவடைந்ததை அடுத்து மாற்றுப்பாதையில் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி வரை ஐஓசி சார்பில் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்த வரை தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது. குறிப்பாக தாமிரபரணி வடகால் பாசனத்திற்கு உட்பட்ட குலையன்கரிசல், பொட்டல்காடு கிராமத்தில் 120 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்கள் வழியாக இந்த எரிவாயு குழாய் பதிக்கும் பாதை வருகிறது.
மேலும் பொட்டல்காடு அரசு உயர்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், குடியிருப்பு பகுதி அருகிலும் எரிவாயு குழாய் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு இப்பகுதி வழியாக எரிவாயு குழாய் அமைத்தால் விளை நிலங்கள் அழிவதுடன், குழாய்களில் கசிவு உள்ளிட்ட விபத்துகள் ஏற்படும் என்பதால் பொட்டல்காடு கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். பின்னர் இதுகுறித்து கோரிக்ைக விடுத்த மக்களிடம் பேசிய கலெக்டர், மாற்றுப்பாதை குறித்து ஒரு வாரத்தில் அதிகாரிகள் ஆய்வுப்பணி மேற்கொள்வார்கள் என உறுதியளித்தார். அதன்படி மாற்றுப்பாதையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் தொடர்பாக ஐஓசி நிறுவன அதிகாரிகள், டிஎஸ்பிகள் கணேஷ், பிராகாஷ், முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், தாசில்தார் செல்வக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வுப்பணி மேற்கொண்டனர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திவந்த ஆய்வு பணிகள் நிறைவடைந்தன. இதையடுத்து மாற்றுப்பாதையில் எரிவாயு குழாய்கள் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர்.  


Tags : completed gas, pipelines , diverted , Villagers expect
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...