×

நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு சிகிச்சையளித்த 3 மனநல மருத்துவர்களிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு

பாந்த்ரா : தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு மனநல சிகிச்சை அளித்த 3 டாக்டர்களிடம் பாந்த்ரா போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவுசெய்தனர்.  கிரிக்கெட் வீரர் டோனியின் சுயசரிதை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த மாதம் 14ம் தேதி பாந்த்ராவில உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை  செய்து  கொண்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பாந்த்ரா போலீசார் முதல் கட்ட விசாரணையில் மனஅழுத்தம் காரணமாக நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பாக பிரபல திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, பாலிவுட் காஸ்டிங் டைரக்டர் முகேஷ் சாப்ரா, நடிகைகள் சஞ்சனா சங்கி, ரியா சக்ரபர்த்தி மற்றும் நண்பர் சந்தீப் சிங் உள்பட 36 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த சனிக்கிழமை தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ராவிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்தனர். இந்நிலையில்,சுஷாந்த் சிங்கிற்கு மனநல சிகிச்சையளித்த மனநல டாக்டர்கள் 3 பேரிடம் பாந்த்ரா போலீசார் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தினர். அப்போது டாக்டர்கள் அளித்த வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்து கொண்டதாக 9 வது மண்டல போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் திரிமுகி தெரிவித்தார்.

Tags : psychiatrists ,Sushant Singh , Police confession, recorded, 3 psychiatrists,treated actor ,Sushant Singh
× RELATED இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து...