×

மின்கட்டண முறைகேட்டை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி திமுக ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: தமிழகத்தில் கொரோனா காலத்திலும் மின்கட்டணத்தை கொள்ளையடிக்கும் அதிமுக அரசை கண்டித்து திமுகவினர் சமூக இடைவெளி விட்டு ஆர்ப்பாட்டம் செய்யுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையொட்டி பூந்தமல்லி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி பட்டாபிராமில் உள்ள அவரது வீடு முன்பு கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆவடி மாநகர துணை செயலாளர் து.சௌந்தர், வட்ட செயலாளர் ஒய்.தாஸ்,  வக்கீல் சின்னா ஆகியோர் கலந்து கொண்டனர். திருவள்ளூர் ஆயில் மில் அருகே வி.ஜிராஜேந்திரன் எம்.எல்.ஏ. கருப்புக்கொடி ஏந்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் கே.அரிகிருஷ்ணன், பொன்.பாண்டியன், ஐ.ஏ.மகிமை தாஸ், தேவன், காஞ்சிபாடி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநில மாணவர் அணி இணை செயலாளர் ஜெரால்டு தலைமையில் பூந்தமல்லியிலும், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன் தலைமையிலும், பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான பூவை எம்.ஜெயக்குமார் தலைமையில் நசரத்பேட்டையிலும், நகர செயலாளர் எம்.ஜெயக்குமார் தலைமையில் கரையான்சாவடியிலும், பூந்தமல்லி மேற்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவருமான டி.தேசிங்கு தலைமையில் கொத்தியம்பாக்கத்திலும், திருவலாங்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.ராஜேந்திரன் தலைமையில் கூளூரிலும் பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்டி ஒன்றியக்குழு துணைத் தலைவர் மகாலட்சுமி மோதிலால் ஆகியோர் தலைமையிலும் கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மோ.ரமேஷ் தலைமையிலும், திருவள்ளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்.ஆர்.கண்டிகையிலும்,

தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் தலைமையில் கல்லூரியிலும் திருவேற்காடு நகர செயலாளர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் யாதவா தெருவிலும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.பிரபுகஜேந்திரன் தலைமையில் வேலப்பன்சாவடியிலும், திருவள்ளூர் ஒன்றியம் தொழுவூரில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பா.நரேஷ்குமார் மாவட்ட பிரதிநிதி சே.பிரேம் ஆனந்த் ஆகியோர் தலைமையிலும், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வி.சி.ஆர்.குமரன் தலைமையில் கடம்பத்தூரிலும், திருவள்ளூர் நகரம் 8வது வார்டில் மகளிர் அணி சார்பில் பூங்குழலி கமலக்கண்ணன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆவடி: திருவள்ளுர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை வகித்தார். திமுகவினர் கையில் பதாகையுடன் கோஷமிட்டார். உடன், ஆவடி மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன், மாநகர அவைத் தலைவர் ரா.ருக்கு, அலுவலக உதவியாளர் மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பட்டத்துக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதி மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், ஒன்றிய கவுன்சிலர் ஜோதி, மாவட்ட மருத்துவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ், கோட்டக்கரை கிருஷ்ணன், பன்பாக்கம் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் கும்மிடிப்பூண்டி அடுத்த கோளூர் பகுதியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையிலும், கவரப்பேட்டையில் கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் நமச்சிவாயம், திமுக ஒன்றிய துணை செயலாளர் திருமலை,  முன்னாள் ஒன்றிய இளைஞணி அமைப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தது.


Tags : protests ,DMK , Electricity, condemnation, black flag, DMK, demonstration
× RELATED மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு...