×

வாலிபருக்கு வெட்டு: டிரைவர் கைது

ஆவடி: ஆவடி அடுத்த வீராபுரம், காந்தி தெருவை சேர்ந்தவர் அருண்  (34). இவர் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது சித்தப்பா லோகநாதன் (54). மேலும், இதே பகுதி வேணுகோபால் நகரில் வசிப்பவர் ரவிசங்கர் (21). கார் டிரைவர். சமீபத்தில் லோகநாதன், ரவிசங்கரின் தந்தை டில்லிபாபுவை சந்தித்துள்ளார். அப்போது, அவர் டில்லிபாபுவிடம், “உங்கள் மகனுடைய நடவடிக்கைகள் சரியில்லை. அவனுக்கு புத்திமதி கூறி கண்டித்து வையுங்கள்” என கூறியுள்ளார். இதனையடுத்து, டில்லிபாபு, தனது மகன் ரவிசங்கரை கண்டித்துள்ளார். மேலும், தந்தை கண்டிப்பதற்கு லோகநாதன் தான் காரணம் என்பதை ரவிசங்கர் தெரிந்துகொண்டார்.  

இதனையடுத்து, கடந்த 19ம் தேதி ரவிசங்கர், லோகநாதன் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது,  ரவிசங்கரை, அருண் தட்டி கேட்டார். இதனால், அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், ரவிசங்கர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருணை சரமாரியாக தலையில் வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த அருண் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதை பார்த்த ரவிசங்கர், அங்கிருந்து தப்பினார். பின்னர், அருணை உறவினர்கள் மீட்டு ஆவடி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின் ேபரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிசங்கரை நேற்று கைது செய்தனர்.

Tags : teenager , Walibur cut, driver, arrested
× RELATED திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது