×

காங்கிரஸ் பிரமுகர் நீக்கம்

புழல்: திருவள்ளூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்பத்தூர் எஸ்.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவள்ளூர் மத்திய மாவட்டம் திருவொற்றியூர் வடக்கு பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஏ.கே.எஸ்.ரங்கேஷ்வரன் என்பவர் தொடர்ந்து கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் வகையில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவின்பேரில் ஏ.கே.எஸ்.ரங்கேஷ்வரன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே காங்கிரஸ் தோழர்கள் யாரும் ஏ.கே.எஸ்.ரங்கேஷ்வரனுடன் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Congress , Congress, celebrity, dismissal
× RELATED ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது...