×

வறுமையை சமாளிக்க டீ விற்றபோது 5வது மாடியிலிருந்து விழுந்து பள்ளி மாணவன் பரிதாப பலி: மண்ணடியில் சோகம்

சென்னை: கொரோனாவால் கார் டிரைவரான தந்தைக்கு வருமானம் இல்லாததால், குடும்ப வறுமையை போக்க டீ விற்ற பள்ளி 5வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்தான். சென்னை மண்ணடி மூர் தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். கார் டிரைவர். இவரது மகன் ரியாஸ் (15), அதே பகுதியில் 9ம் வகுப்பு பயின்று வந்தான். கொரோனா ஊரடங்கால் ஜாகிர் உசேனுக்கு வேலை இல்லாததால் குடும்பம் நடத்த பணமின்றி தவித்து வந்தார். குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு, அவரது மகன் ரியாஸ், வீட்டில் டீ தயாரித்து, அப்பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளான். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து குடும்பத்தினர் வாழ்க்கையை கடத்தி வந்தனர்.

இந்நிலையில், மண்ணடி அரண்மனைகாரர் தெருவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 5வது மாடியில் நேற்று டீ விற்பனை செய்ய சிறுவன் ரியாஸ் சென்றுள்ளான். அப்போது, அங்கு லிப்ட் சீரமைப்பு பணி நடைபெற்று வந்துள்ளது. இதற்காக, லிப்ட் அகற்றப்பட்டு திறந்த நிலையில் இருந்துள்ளது. அதன் அருகே தடுப்பு ஏதும் வைக்கப்படவில்லை, என்று கூறப்படுகிறது. இதையறியாத சிறுவன், லிப்ட் உள்ளதாக உள்ளே சென்றபோது, 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்பிளனேடு போலீசார், சிறுவனின் உடலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : floor ,Schoolboy , Poverty, when selling tea, 5th floor, falling, schoolboy, killed, mud
× RELATED ‘வெளி உலகுக்கு தெரிய வேண்டும்...