×

டெல்லியில் 4ல் ஒருவருக்கு கொரோனா

புதுடெல்லி: டெல்லி மாநில அரசுடன் இணைந்து தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) கடந்த ஜூன் 27 முதல் ஜூலை 10 வரை கோவிட்-19 பரவல் குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதற்காக ஒரு செரோ ஆய்வு நடத்தப்பட்டது. இதன்படி, நோய்த்தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதை சரிபார்க்க தனிநபர்களின் இரத்தத்தில் உள்ள செரெம் குறித்து பரிசோதிக்கப்படும். டெல்லியின் 11 மாவட்டங்களுக்கும், கணக்கெடுப்பு குழுக்கள் அனுப்பப்பட்டு தகவல்கள் பெற்ற பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களிடமிருந்து இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர், அவர்களின் செரா ஐஜிஜி ஆன்டிபாடிகள் மற்றும் தொற்றுநோய் பரவல் ஆகியவை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்த கோவிட் கவாச் எலிசாவைப் பயன்படுத்தி பரிசோதிக்கப்பட்டது.

இதுபோன்று மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் எந்தவித அறிகுறியில்லாமல் இருப்பது தெரிய வந்தது.அதோடு, டெல்லி முழுவதும் சராசரியாக, ஐஜிஜி ஆன்டிபாடிகளின் பாதிப்பு 23.48 சதவீதமாக இருப்பது தெரியவந்தது. தொற்றுநோய்க்கு ஏறக்குறைய ஆறு மாத நெருக்கத்தில் டெல்லியில் 23.48 சதவீத மக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி கணக்கிட்டால், டெல்லியில் 4 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Tags : Delhi ,Corona , Delhi, for one in 4, Corona
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு