×

உடல்நலக் குறைவு மத்திய பிரதேச ஆளுநர் தாண்டன் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

லக்னோ: மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி தாண்டன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் (84). மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மாதம் 11ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அதிகாலை அவர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர். லால்ஜியின் மகன் அசுதோஸ் கூறுகையில், “ஹஸ்ரத்கன்ஜில் உள்ள அலுவலக குடியிருப்பில் தந்தை லால்ஜியின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும். பின் சின்திடோலாவில் இறுதி சடங்கு நடைபெறும் ,” என்றார். தாண்டனின் மறைவுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘சமுதாயத்துக்கு சேவை செய்வதற்காக அயராது மேற்கொண்ட முயற்சிகளுக்காக தாண்டன் நினைவுக்கூரப்படுவார். உபி.யில் பாஜ.வை வலுப்படுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றி உள்ளார்,’ என கூறியுள்ளார்.


Tags : Tandon ,Madhya Pradesh ,Leaders , Ill health, Madhya Pradesh, Governor Tandon, passed away, leaders mourn
× RELATED மத்திய பிரதேசத்தில் பாஜக...